கஞ்சா கடத்தியவர் கைது


கஞ்சா கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 1 May 2022 10:00 PM IST (Updated: 1 May 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் ஆனந்தராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் முனியசாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் இருந்தவர் முனியசாமிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த பூமிநாதன் மகன் முத்துகிருஷ்ணன் என்ற கார்த்திக் (வயது 22) என்பதும், அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முத்துகிருஷ்ணன் என்ற கார்த்திக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும், காரையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story