திருமூர்த்திஅணை மற்றும் அருவிபகுதியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதியில் இறங்கி குளித்தனர்.

திருமூர்த்திஅணை மற்றும் அருவிபகுதியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதியில் இறங்கி குளித்தனர்.
x
தினத்தந்தி 1 May 2022 10:04 PM IST (Updated: 1 May 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்திஅணை மற்றும் அருவிபகுதியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதியில் இறங்கி குளித்தனர்.

தளி, 
திருமூர்த்திஅணை மற்றும் அருவிபகுதியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதியில் இறங்கி குளித்தனர். 
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் திருமூர்த்திஅணை உள்ளது. அணைப்பகுதியில் சிறுவர்பூங்கா, வண்ண மீன் காட்சியகம், நீச்சல்குளம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  அடிவாரப் பகுதியில் மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவியும் உள்ளது. இங்கு தினமும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அந்த சூழலில் நேற்று மே தினத்தையொட்டி வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வந்தனர்.பின்னர் அனைவரும் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சென்றனர். இதனால் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது ஒரு சில சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இறங்கி குளித்தனர். 
கம்பிவேலி
கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கம்பிவேலி வெள்ளப்பெருக்கின் போது அடித்துச் செல்லப்பட்டது. அதனை சீரமைப்பதற்கு இதுவரையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் அந்த பகுதி திறந்த வெளியாக உள்ளது.இதை சாதகமாகக் கொண்டு சுற்றுலா பயணிகள் அணைக்குள் அத்துமீறி செல்கின்றனர்.அப்போது அபாயகரமான ஏற்கனவே ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதியில் குளித்து வருகின்றனர். எனவே கோவில் முன்பு திறந்த வெளியாக உள்ள பகுதியில் கம்பி வேலியை அமைப்பதற்கும் அருவிப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story