தோட்டத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த குருவி


தோட்டத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த குருவி
x
தினத்தந்தி 1 May 2022 10:13 PM IST (Updated: 1 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

தோட்டத்தில் கூடு கட்டி குஞ்சு பொறித்த குருவி

வால்பாறை

வால்பாறை அருகே உள்ள கவர்க்கல் எஸ்டேட் 1-ம் ெநம்பர் தேயிலை தோட்ட பகுதியில் நேற்று காலையில் வழக்கம்போல் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ெதாழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே குருவி குஞ்சுகள் கத்தும் சத்தம் கேட்டது. உடனே தொழிலாளர்கள், சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்றனர். 

அங்கு ஒரு தேயிலை செடியில் செம்மீசை சின்னான் என்று அழைக்கப்படும் கொண்டை வளர்த்தான் குருவி கூடு கட்டி குஞ்சு பொறித்து இருப்பது தெரியவந்தது. அதில் 2 குஞ்சுகள் இருந்தன. இதை கண்ட தொழிலாளர்கள், அந்த இடத்தில் பச்சை தேயிலை பறிக்கும் பணியை கைவிட்டனர். தொடர்ந்து குருவி குஞ்சுகளுக்கு இடையூறு செய்யாமல், வேறு இடத்தில் பச்சை தேயிலை பறிக்கும் பணியை மேற்கொண்டனர்.

Next Story