‘பங்களா கோர்ட்டு' நுழைவு வாயிலை சொந்த பணத்தில் சீரமைத்த பொதுமக்கள்


‘பங்களா கோர்ட்டு நுழைவு வாயிலை சொந்த பணத்தில் சீரமைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 May 2022 10:13 PM IST (Updated: 1 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

கோமங்கலம்புதூரில் 500 ஆண்டு பழமை வாய்ந்த ‘பங்களா கோர்ட்டு' நுழைவு வாயிலை சொந்த பணத்தில் பொதுமக்கள் சீரமைத்தனர்.

பொள்ளாச்சி

கோமங்கலம்புதூரில் 500 ஆண்டு பழமை வாய்ந்த ‘பங்களா கோர்ட்டு' நுழைவு வாயிலை சொந்த பணத்தில் பொதுமக்கள் சீரமைத்தனர்.

‘பங்களா கோர்ட்டு’

பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூர் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘பங்களா கோர்ட்டு' என்று அழைக்கப்படும் நுழைவுவாயில் உள்ளது. 

இந்த நுழைவுவாயிலின் இருபுறமும் இருந்த தூண்கள் லாரி மோதியதால் மிகவும் சேதமடைந்தன. நீண்ட நாட்கள் ஆகியும் அது சீரமைக்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் இணைந்து சொந்த பண மற்றும் நன்கொடை வசூலித்து நுழைவு வாயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த பணி நிறைவு பெற்று உள்ளது. இதன் திறப்பு விழா, வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

நவீன தொழில்நுட்பம்

இதுகுறித்துபொதுமக்கள் கூறியதாவது:- இந்த நுழைவுவாயில் வழியாக வருபவர்கள், அங்குள்ள விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து செல்வது வழக்கம். 

கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடத்தின் மேற்கூரை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கட்டப்பட்டதை போன்று உள்ளது. இது பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் பஞ்சாயத்து களமாக இருந்து இருக்கிறது, இதனால் ‘பங்களா கோர்ட்டு' என்று அழைக்கப்படுகிறது.

பழைய நிலைக்கு...

இங்கு மார்கழி, புரட்டாசி மாதங்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியின்போது வீதி உலா வரும் பெருமாளை மேடையில் வைத்து 2 மணி நேரத்துக்கு மேலாக பஜனை பாடல்கள் பாடி, வழிபாடு செய்வது நடைமுறையில் உள்ளது. 

அந்த நுழைவுவாயிலில் பழுதடைந்த தூண்களுக்கு பதிலாக நாகர்கோவிலில் இருந்து புதிய தூண்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. அதை வைத்து புனரமைத்து, பழைய நிலைக்கு மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story