இரும்பு கடையில் வயர் திருடிய வாலிபர் கைது


இரும்பு கடையில் வயர் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 May 2022 10:19 PM IST (Updated: 1 May 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

இரும்பு கடையில் வயர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ்மூர்த்தி (வயது 31). இவர் ராமநாதபுரம் ஆத்மநாதசுவாமி நகர் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் கடையின் உள்ளே புகுந்து 8 கிலோ எடை உள்ள காப்பர் வயர் கம்பி, பித்தளை வயர் கம்பி ஆகியவற்றை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்ட போது நள்ளிரவில் கடைக்குள் புகுந்து திருடியது ராமநாதபுரம் சேதுநகரை சேர்ந்த பாலமுருகன் (27) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story