முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 May 2022 10:24 PM IST (Updated: 1 May 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரகு கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி விளக்க உரையாற்றினார். 

இதில் ஆசிரியர்களுக்கு என்று தனியாக பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

இதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் முருகவேல் நன்றி கூறினார்.

Next Story