பெண்ணுடனான நெருக்கத்தை வெளிப்படுத்த உல்லாச படங்களை வெளியிட்ட கள்ளக்காதலன்


பெண்ணுடனான நெருக்கத்தை வெளிப்படுத்த உல்லாச படங்களை வெளியிட்ட கள்ளக்காதலன்
x
தினத்தந்தி 1 May 2022 10:34 PM IST (Updated: 1 May 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில், கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுடனான நெருக்கத்தை வெளிப்படுத்த உல்லாச படங்களை கள்ளக்காதலன் வெளியிட்டார். அவற்றை உறவினர்களுக்கு பகிர்ந்து கணவர் அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.



சிவமொக்கா:

பெண்ணின் ஆபாச படங்களை...

   சிவமொக்கா டவுனில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு, வீரேஷ் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. பின்னர் 2 ஆண்டுகள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர்.

  இதையடுத்து பெண்ணுக்கு, தாவணகெரே மாவட்டம் ஒன்னள்ளி தாலுகா கியாசினகெரே கிராமத்தை சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
  
அதன்படி 2 பேரும் தனியாக சந்தித்து பேசி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நபர், பெண்ணுடன் நெருக்கமாகவும், உல்லாசமாகவும் இருப்பதை தனது செல்போனில் படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலன், பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை வெளிப்படுத்த உல்லாச படங்களை அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

போலீசார் விசாரணை

  இதனை பார்த்த அவரது கணவரும் பெண்ணின் ஆபாச படங்களை தனது உறவினர்களுக்கு அனுப்பி பெண்ணை மானபங்கம் செய்து உள்ளார். இதனால் அந்த பெண் மனம் உடைந்துள்ளார்.
  
இதுபற்றி பெண், சிவமொக்கா குற்றப்பிரிவு போலீசில் கள்ளக்காதலன், கணவர் மீது புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story