அங்கநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
அங்கநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர்
திருப்பத்தூரை அடுத்த மடவாளம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அங்கதாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு லிங்கம் பாதி உடைந்த நிலையில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென 25 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
நல்லதம்பி எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் இதுகுறித்து கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று ராஜகோபுரத்தை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தமிழக அறநிலையத்துறை ரூ.35½ லட்சம் நிதியை ஒதுக்கியது. இதனை தொடர்ந்து கோவில் திருப்பணிகள் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். கலெக்டர் அமர்குஷ்வாஹா, திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி, கோவில் அறங்காவல் குழு தலைவர் வஜ்ஜிரவேல் கலந்துகொண்டு யாக குண்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
Related Tags :
Next Story