ரூ.1 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
ரூ.1 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி முதுகுளத்தூர் கிளை கழகம் சார்பில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு உணவு பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி நகர துணைச்செயலாளர் சேட் சாகிர் உசேன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பொருளாளர் வாவா ராவுத்தர் முன்னிலை வகித்தார். இதையொட்டி முதுகுளத்தூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சகாபுதீன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் தமிம் அகமது, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தினேஷ்குமார், நகரத் துணைச் செயலாளர் ராஜா முகம்மது காசிம், அப்துல் ரகுமான், சாகுல் ஹமீது, இஸ்மாயில், சாகிர் உசேன், அமீர் ஷேக், அமீன், அஜிம் நெய்னா, முஹம்மது உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story