தங்க நகைக்கு அதிக பணம் தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதன மோசடி
தங்க நகைக்கு அதிக பணம் தருவதாக கூறி மூதாட்டியிடம் நூதன மோசடி செய்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது
மும்பை,
மும்பை தகிசர் பகுதியை சேர்ந்த மூதாட்டி வசந்தி (வயது65). இவர் சம்பவத்தன்று தகிசர் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்து இருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் மூதாட்டியிடம் சைசாக பேச்சு கொடுத்தனர். பின்னர் நீங்கள் அணிந்திருக்கும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்கசங்கிலியை தங்களிடம் தந்தால் ரூ.3 லட்சம் அதிக பணம் தருவதாக தெரிவித்தனர்.
மேலும் மூதாட்டியை நம்ப வைப்பதற்காக தாங்களிடம் இருந்த பணநோட்டு பண்டல்களை காண்பித்தனர். இதனை நம்பிய வசந்தி தங்கசங்கிலியை அவர்களிடம் கொடுத்து பணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் வீட்டிற்கு சென்று பணத்தை எண்ணிய போது அவை அணைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. இது குறித்து வசந்தி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நூதன முறையில் மோசடி செய்த கும்பலை பிடிக்க கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஒருவரின் அடையாளம் தெரியவந்தது. இதில், அவர்கள் நாலாச்சோப்ரா ரெயில் நிலையத்தில் நடமாடுவது தெரியவந்தது.
உடனே போலீசார் அங்கு சென்று அந்த கும்பலை சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் சஞ்சய் ராகனே(வயது35), ஜித்து சோலங்கி(20) 15 வயது சிறுவன் என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகைளை பறிமுதல் செய்தனர். இவர்கள் பெண்களை குறிவைத்து நூதன முறையில் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story