தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த முகாமில் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 75 ஆயிரத்து 770 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 75 ஆயிரத்து 770 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலும் 763 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசியாக இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13 லட்சத்து 6 ஆயிரத்து 447 பேருக்கும் (95 சதவீதம்), 2-வது தவணை தடுப்பூசியாக 9 லட்சத்து 80 ஆயிரத்து 59 பேருக்கும் (70.6 சதவீதம்), ஊக்க தடுப்பூசி 6 ஆயிரத்து 883 பேருக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.
15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 ஆயிரத்து 790 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 62 ஆயிரத்து 800 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.
12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 36 ஆயிரத்து 11 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 12 ஆயிரத்து 245 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
75 ஆயிரம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த முகாமில் 7 ஆயிரத்து 453 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 67 ஆயிரத்து 113 பேர் 2-வது தவணை தடுப்பூசியும், 1204 பேர் ஊக்க தடுப்பூசியும் ஆக மொத்தம் 75 ஆயிரத்து 770 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story