பெண் தற்கொலை; கணவர்- மாமியார் கைது
திருத்துறைப்பூண்டி அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் அவருடைய கணவர் மற்றும் மாமியரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் அவருடைய கணவர் மற்றும் மாமியரை போலீசார் கைது செய்தனர்.
பெண் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தானம் தாங்கியை சேர்ந்தவர் காயத்ரி (வயது20). இவர் திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் வரம்பியம் பகுதியை சேர்ந்த டிரைவர் பார்த்திபன் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காயத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய திருத்துறைப்பூண்டி போலீசார் திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காயத்ரியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக்கூறி உறவினர்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
கணவர்- மாமியார் கைது
இந்தநிலையில் காயத்ரியின் அண்ணன் மகேந்திரன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது தங்கையை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியின் கணவர் பார்த்திபன், பார்த்திபனின் தாயார் ராஜேஸ்வரி (43) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story