பிடாகம், அங்கராயநல்லூரில் கிராம சபை கூட்டம் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
பிடாகம், அங்கராயநல்லூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் பிடாகம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பேசுகையில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறுகின்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வளர்ச்சிகளுக்கும், தனிநபர் வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயனுள்ள வகையில் இந்த கிராம சபை கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிராம ஊராட்சிகள் வளர்ச்சியடைந்தால்தான் நாடு முழுமையாக வளர்ச்சி பெற முடியும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட கவுன்சிலர் வனிதா, ஒன்றிய கவுன்சிலர் அமுதா, பிடாகம் ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார், துணைத்தலைவர் சூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செஞ்சி
இதேபோல், செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரசிங்க ராயன் பேட்டை ஊராட்சி அங்கராயநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிலால் தலைமை தாங்கினார்.
விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராமசபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொண்டு, பேசுகையில், கிராமங்கள் வளர்ச்சி பெறும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, தாசில்தார் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் டாக்டர் மலர்விழி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், அரசு ஒப்பந்ததாரர் கோட்டீஸ்வரன், தொண்டரணி பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story