தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் சிம்மனபுதூர் தி.மு.க. ஊராட்சி மற்ற தலைவர் மலர் தண்டபாணி, ஊராட்சி செயலாளர் பி.நர்மதா, ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள் ராமூர்த்தி மற்றும் துணைத் தலைவர், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் சிம்மனபுதூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் அரசு பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கந்திலி வடக்கு ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் எஸ்.சி.தண்டபாணி, அவரது மகன் சந்துரு ஆகிய இருவரும் தொண்டர்களை அழைத்து வந்து கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் தகராறு செய்தனர். தட்டிக் கெட்டவர்களை எல்லாம் தகாத வார்த்தையில் பேசினார்கள். ஒவ்வொரு முறையும் கூட்டம் நடத்தும் போது இது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தீர்மானங்களை படித்துக்கொண்டிருந்தபோது புத்தகத்தை பிடுங்கி ஊராட்சி செயலாளரை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story