ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்
மயிலாடுதுறை,சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம் நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை,சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம் நடந்தது.
மேதின ஊர்வலம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமன் தலைமை தாங்கினார்.. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இடும்பையன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
சீர்காழி ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தெற்கு வீதி வந்தடைந்தது. இதில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
இதேபோல மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஈழவளவன் தலைமை தாங்கினார். பேரணி ரயிலடி காவிரி நகரில் இருந்து புறப்பட்டு பூக்கடை தெரு, காமராஜர் சாலை, கண்ணாரத் தெரு வழியாக சின்னக்கடை வீதி வந்தடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
ஊர்வலத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்களை சாதி, மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். மாணவர், இளைஞர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்கள் மற்றும் மது வகைகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சியின் நிர்வாகிகள் ராஜமோகன், சீசர், பாரதிவளவன், தமிழ்தென்றல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story