கூத்தாநல்லூர் அருகே சேகரை பகுதியில் பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே சேகரை பகுதியில் பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் அருகே சேகரை பகுதியில் பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பயணிகள் நிழலகம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடியில் இருந்து பிரிந்து செல்லும் கொரடாச்சேரி வழித்தடத்தில் அமைந்துள்ளது சேகரை கிராமம். இந்த கிராமத்தையொட்டிய முருகன் கோவில் அருகில் பயணிகள் நிழலகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்த பயணிகள் நிழலகத்தை கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, கொரடாச்சேரி, குடவாசல், கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, வடபாதிமங்கலம் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வரக்கூடிய பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பயன்படுத்த முடியாத நிலை
இந்த நிலையில், இந்த பயணிகள் நிழலகம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. பயணிகள் நிழலக கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், தரைதளம் குண்டும், குழியுமாகவும், இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து மிகுந்த வழித்தடத்தில் அமைந்துள்ள பயணிகள் நிழலகம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது பல்வேறு தரப்பினரையும் வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.
சீரமைக்க கோரிக்கை
பயணிகள் நிழலகம் சேதம் அடைந்து இருப்பதால் சாலையோரம் பஸ்சுக்கு காத்திருக்க வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எனவே எனவே சேதம் அடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைப்பு செய்து தர வேண்டும் அல்லது சேதம் அடைந்த நிழலகத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக பயணியர் நிழலகம் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story