ஆசிரியர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கோரி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கோரி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 May 2022 11:47 PM IST (Updated: 1 May 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கோரி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சிவகங்கையில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகங்கை, 
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். பணி நிரவல் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். இரண்டு ஆண்டாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் மகேந்திரன், மாநில துணைத் தலைவர் ஜேம்ஸ் குமார், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் பழனியப்பன், மகளிர் அணி அமைப்பாளர் உமாராணி மற்றும் சொர்ணலதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் மலைச்சாமி நன்றி கூறினார்.

Next Story