திருக்கோவிலூரில் மாறுதலாகி செல்லும் நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா


திருக்கோவிலூரில் மாறுதலாகி செல்லும் நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா
x
தினத்தந்தி 1 May 2022 11:47 PM IST (Updated: 1 May 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் மாறுதலாகி செல்லும் நீதிபதிகளுக்கு பிரிவு உபசார விழா


திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த கூடுதல் நீதிபதி பி.வித்யா மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பணிபுரிந்து வந்த நீதிபதி எம்.என். ராஜநந்திவர்மசிவா ஆகியோர் பணி மாறுதலாகி செல்வதையொட்டி திருக்கோவிலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரிவு உபசார விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மூத்த வக்கீல் எம்.தங்கம் தலைமை தாங்கினார். வக்கீல்கள் ஆனந்தன், ராஜ்குமார், இளங்கோவன், மருதுசேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல் ரஜினிகாந்த் வரவேற்றார். விழாவில் கலந்து கொண்ட வக்கீல்கள் அனைவரும் பணி மாறுதலாகி செல்லும் நீதிபதிகளை பாராட்டி பேசினார்கள். இதில் வக்கீல்கள் மூர்த்தி, பாண்டு, ராஜாராமன், குமரன், குருபாலன், தமிழ்ச்செல்வன், அன்பரசு, எவரெஸ்ட், ஹேமலதா, நிவேதா மற்றும் வக்கீல்கள், காவல்துறையினர், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்களின் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வக்கீல் கோடீஸ்வரன் நன்றி கூறினார்.

Next Story