சுற்றுலா வளாகத்தில் தூய்மை பணி


சுற்றுலா வளாகத்தில் தூய்மை பணி
x
தினத்தந்தி 1 May 2022 11:48 PM IST (Updated: 1 May 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது

திருவெண்காடு:
 பூம்புகார் சுற்றுலா வளாகப் பகுதியில் மே தினத்தையொட்டி நேற்று போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  நிஷா தொடங்கி வைத்து தானும் தூய்மை பணியில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறுகையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த பூம்புகார் சுற்றுலா வளாக பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உள்ளூர் மக்கள் அடிக்கடி தூய்மைப் பணிகளில் ஈடுபட வேண்டும். மேலும் சுற்றுலா வளாகப் பகுதியில் குப்பைகள் சேராத வண்ணம் போலீசார் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.  இதில் பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, சீனிவாசா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, மீனவ கிராம பொறுப்பாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story