கலவை பேருராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கலவை பேருராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை கலெக்டர் பறிமுதல் செய்தார்.
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருராட்சியில் நேற்று மளிகைக் கடை, ஜெனரல் ஸ்டோர், டீ கடை, கூல்ட்ரிங்ஸ் போன்ற கடைகளில் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தார். மேலும் இறைச்சி கடைகளில் இறைச்சிகளை வாழை இலை அல்லது மந்தாரை இலையில் வழங்க வேண்டும், அல்லது பாத்திரம் கொண்டு வந்து அதில் இறைச்சியை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக ஆக்க வேண்டும். இதனை நகராட்சி, பேருராட்சி, கிராம ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள் நேரடியாக பார்வையிட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, கலவை தாசில்தார் ஷமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம அதிகாரிகள் சுகுமார், ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story