திருப்பத்தூரில் மஞ்சுவிரட்டு
திருப்பத்தூரில் மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பெரிய கண்மாய் கரையில் அமைந்துள்ள திருப்பத்தூர், தம்பிபட்டி, புதுபட்டி கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட குளக்கரை காத்த கூத்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. காலை 10 மணிக்கு ராமர் மடத்தில் கூடிய மூன்று கிராமத்தாரும் கோவில் காளைகளுடன் மேளதாளம் முழங்க காளைகளுக்கு ஜவுளி எடுத்து ஊர்வலமாக கோவில் வந்தனர். கோவிலில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று மாடுகளுக்கு தீபம் காட்டி வேட்டி துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் முதலில் கோவில் காளைகள் அவிழ்க்கபட்டதை தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் அய்யனார் கோவில் திடலில் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டது. இதில் ஒருசில மாடுகள் காளையர்களிடம் பிடிபட்டும் சிலமாடுகள் போக்கு காட்டியும் சென்றன. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Related Tags :
Next Story