பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் தேவராயசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற வெள்ளக்கல் மகா மாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நாளை (செவ்வாய்கிழமை) தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வபாண்டியன், மணிமாறன் தலைமையில் ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவகாமி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுபா, மின்சாரத்துறை உதவி பொறியாளர் மேகலை, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேர் திருவிழாவின்போது மின்சாரம் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை நிறுத்தப்படும். தார்சாலையில் பள்ளங்கள் இருந்தால் சரி செய்யப்படும். சன்ன கட்டை போடுபவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மது அருந்தி இருந்தால் அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள் என முக்கிய முடிவுகள் இந்த ஆலோசைனை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
பின்னர் அதிகாரிகள் தேரின் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தேர் மற்றும் தேரோடும் வழித்தடங்களையும், கோவில் மற்றும் தேரோடும் வீதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story