பாதை தவறி வந்த புள்ளிமான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு


பாதை தவறி வந்த புள்ளிமான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 2 May 2022 12:02 AM IST (Updated: 2 May 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

பாதை தவறி வந்த புள்ளிமான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 65). விவசாயி. இவருக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுமார் 8 மாதமே ஆன புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அதனைப் பார்த்து வியந்த விவசாயி அன்பழகன் அதனை பிடித்து பாதுகாப்பாக தனது வீட்டில் வைத்துவிட்டு ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசாருக்கும், பிராஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் அரியலூர் வனசரக அதிகாரி சக்திவேல் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வீட்டில் பிடித்து பாதுகாப்பாக வைத்திருந்த புள்ளிமான் குட்டியை வனத்துறை அலுவலர் மணவாளனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து குட்டி புள்ளிமான் குட்டியை வனப்பகுதியில் விட வனத்துறை அலுவலர் மணவாளன் கொண்டு சென்றார்.

Next Story