மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 May 2022 12:08 AM IST (Updated: 2 May 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர்-சிவகாசி சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

விருதுநகர், 
விருதுநகர்-சிவகாசி சாலையில் நேற்று மாலைவீரச்செல்லையாபுரத்தில் இருந்து ஆமத்தூர் வரை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 6 இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தன. இதனால் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சிவகாசியில் நடக்கும் மே தின விழா பொதுக்கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த விருதுநகர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் இதுபற்றி உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கோட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன், நிலைய தீயணைப்பு அதிகாரி கண்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக மரங்களை ஓரத்தில் ஒதுக்கி ஒரு வழிவாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அழகாபுரி விளக்கு அருகே ஒரு மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்கம்பத்தை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் விருதுநகர்-சிவகாசி இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story