கருகிய நிலையில் கட்டிட தொழிலாளி பிணம்
சிவகாசி அருகே தாயில்பட்டியில் கருகிய நிலையில் கட்டிட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே தாயில்பட்டியில் கருகிய நிலையில் கட்டிட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
கருகிய நிலையில் உடல்
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கிராம சேவை மைய கட்டிடத்தில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சந்தானத்திடம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் போலீசார் கிராம சேவை மைய கட்டிடத்தின் மீது ஏறி சோதனை செய்தனர். அப்போது கருகிய நிலையில் வாலிபர் உடல் கிடப்பதை கண்டறிந்தனர். அப்போது கருகிய நிலையில் இருந்த வாலிபர் கையில் அணிந்திருந்த மோதிரத்தின் அடையாளத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கட்டிட தொழிலாளி
விசாரணையில் கோட்டையூர் முனியசாமி என்பவரது மகன் பாலமுருகன் (வயது 28) என்பது தெரியவந்தது. கட்டிட தொழிலாளியான பாலமுருகனை கடந்த சில நாட்களாக அவரது உறவினர்கள் தேடி வந்ததும் தெரியவந்தது.
இவர் தூங்குவதற்காக அந்த கட்டிடத்திற்கு சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலமுருகனின் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story