மின்னல் தாக்கி பிளம்பர் சாவு


மின்னல் தாக்கி பிளம்பர் சாவு
x
தினத்தந்தி 2 May 2022 12:10 AM IST (Updated: 2 May 2022 12:10 AM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கியதில் பிளம்பர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை, 
சிவகங்கை நகரில் நேற்று பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலை 3 மணி அளவில் திடீரென்று மேக மூட்டம் காணப்பட்டது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழைபெய்தது. சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்த பிளம்பர் வேலை செய்து வந்த பாண்டி (வயது 54) என்பவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்து போன பாண்டிக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

Next Story