இடப்பிரச்சினை தகராறு; தம்பதி மீது வழக்கு


இடப்பிரச்சினை தகராறு; தம்பதி மீது வழக்கு
x
தினத்தந்தி 2 May 2022 12:14 AM IST (Updated: 2 May 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

இடப்பிரச்சினை தகராறு சம்பந்தமாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலூர் கிராமத்தை சேர்ந்த தனபால் மகன் ராஜேந்திரன்(வயது 48). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராமானுஜம் மகன் பாபு(45) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜேந்திரனை, பாபு மற்றும் அவரது மனைவி வனஜா(44) ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story