கரூர் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 2 May 2022 12:24 AM IST (Updated: 2 May 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கரூர்,
மெகா தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் 28-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் 550 இடங்களில் முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 29-ந்தேதி வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 8 லட்சத்து 14 ஆயிரத்து 159 பேர். இது 95 சதவீதமாகும். 
2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 6 லட்சத்து 85 ஆயிரத்து 524 பேர். இது 80 சதவீதமாகும். இந்த முகாமில் 550 செவிலியர்கள், 1,100 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களும், 550 சுயஉதவிக்குழுவினர்களும் மற்றும் ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட்டனர். இதில் கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முதல் மறறும் 2-வது தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் காந்தி மண்டபம், காந்தியார் தொடக்கப்பள்ளி, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு  மருத்துவமனை, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி, அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் உள்ள 46 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் வீடு, வீடாக சென்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன. மேற்கண்ட பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுசாமி, மகேந்திரன், கண்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நொய்யல்
நொய்யல் ஈவேரா அரசு மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, சேமங்கி அரசு ஆரம்பப்பள்ளி உள்பட  பல்வேறு இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டனர். மேலும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்றும் கொரோனா தடுப்பூசி போட்டனர்.








Next Story