வேப்பனப்பள்ளி அருகே விஷ காயை சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 6 பேருக்கு வாந்தி-மயக்கம்


வேப்பனப்பள்ளி அருகே  விஷ காயை சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 6 பேருக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 2 May 2022 12:27 AM IST (Updated: 2 May 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே விஷ காயை சாப்பிட்ட மாணவர்கள் உள்பட 6 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தளிக்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது10), அஜித் (9), சதீஷ் (9), மகேஷ்குமார் (9), பிக் பாஷா (10) உள்ளிட்டவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று மாணவர்கள் அந்த பகுதியில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் காய்கள் காய்த்து தொங்கியது. இந்த காயை சாப்பிட்டால் அழகு கூடும் என கருதி மாணவர்கள் அதை பறித்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மாணவர்கள் உள்பட 6 பேர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாணவர்கள் உள்பட 6 பேரையும் மீட்டு வேப்பனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரரணை நடத்தி வருகின்றனர்.

Next Story