செயற்குழு கூட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 2 May 2022 12:29 AM IST (Updated: 2 May 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

கரூர்,
கரூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் அழகிரிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் வரவேற்றார். கூட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாவட்ட மாறுதல் குறித்தான விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலர்களால் பதிவு செய்வதில் சில இடர்ப்பாடுகள் களையப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வருவாய் நிர்வாக ஆணையரை கேட்டு கொள்வது. மாவட்டங்கள், கோட்டங்கள், வட்டங்களை பிரிப்பது போல் பெரிய கிராமங்களை நிலப்பரப்பின் அடிப்படையிலும், மக்கள் தொகையின் அடிப்படையிலும் பிரிக்கவும், கிராம நிர்வாக அலுவலர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டாம் என கேட்டு கொள்வது, ஒரு புல எண்ணில் ஏற்படும் பட்டா மாறுதல் விவரங்களை நமது இணையவழி பக்கத்திலேயே பார்வையிடும் வசதியை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையரை கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story