தர்மபுரி பகுதியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு


தர்மபுரி பகுதியில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 2 May 2022 12:29 AM IST (Updated: 2 May 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி தொகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. குமாரசாமிப்பேட்டை பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி தொகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. குமாரசாமிப்பேட்டை பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆலங்கட்டி மழை
கோடை காலம் தொடங்கி கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தர்மபுரி மாவட்டத்தில் கடுமையான வெப்பம் வீசி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் இப்போது மக்கள் வெளியே வர இதனிடையே கடந்த 4 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறசோமனஅள்ளியில்  சூறைக்காற்றுக்கு  சுற்றுலா வேன் தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்ததை படத்தில் காணலாம். இதனிடையே கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியத. மாலையில் திடீரென கருமேகம் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இதில் தர்மபுரி நகரம், பஸ் நிலையம், பென்னாகரம் சாலை, குமாரசாமிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 
இந்த திடீர் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலவியது. இந்த திடீர் மழையால் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
வீடுகளுக்குள் தண்ணீர்
இந்த நிலையில் குமாரசாமிப்பேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் கழிவு நீருடன் மழைநீர் கலந்து பிள்ளையார் கோவில் தெரு, சிவசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு செல்லும் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியது. மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தன.
இதேபோல் தர்மபுரி அருகே சோமனஅள்ளி பகுதியில் ஒகேனக்கல்லில் இருந்து பொம்மிடி நோக்கி சுற்றுலா வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 11 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

Next Story