பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்


பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்
x

தர்மபுரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தர்மபுரி:
தர்மபுரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம்
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றிவைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதேபோன்று தடங்கம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலைகள் முன்பு சங்க கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். இதேபோல் பல்வேறு இடங்களில் தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான்மாது, தங்கமணி, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, தொ.மு.ச. நிர்வாகிகள் பாலகாந்தி, கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி, அன்புமணி, கலையரசு, ஜெய்சங்கர், சண்முகராஜன், மாரியப்பன், பெரியண்ணன், மாது, முனுசாமி, மாதையன், ராஜா, வெங்கடாசலம், செந்தில், காவேரி, சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா தொழிற்சங்கம்
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா தர்மபுரியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ரவி வரவேற்று பேசினார். சங்க தலைவர் செந்தில்குமார், பொருளாளர் வேல்முருகன், இணை செயலாளர் பாலசுப்ரமணியம், துணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. சங்க கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, மத்திய கூட்டுறவு துணை தலைவர் வேலுமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், அண்ணா பணியாளர் சங்க மாநில செயலாளர் சின் அருள்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், பழனி, செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் தகவல் விஜயன், மோகன், அசோக்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் அங்குராஜ், நிர்வாகிகள் அறிவாளி, மாதேஷ், நகராட்சி கவுன்சிலர் தண்டபாணி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story