அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்,
44 தொழிலாளர் நல சட்டங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசு அமல்படுத்த முன்வந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் வாபஸ் பெற வேண்டும். வீட்டுவேலை பணியாளர்களுக்கு தனிச்சட்டம் இயற்றி, அவர்களது சமூக பாதுகாப்பை உறுதி உறுதி செய்யப்பட வேண்டும். கட்டுமான தொழிலாளிக்கு வழங்கும் நலத்திட்டங்களை போல அனைத்து அமைப்புசாரா தொழிலாளிக்கும் வழங்க வேண்டும். அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி மாத ஓய்வு ஊதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். இதில் அமைப்பாளர் செல்வராஜ், துணை தலைவர் கலா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story