மினிபஸ் டிரைவரை தாக்கியவர் கைது
வேதாரண்யம் அருகே மினிபஸ் டிரைவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரணயத்தில் இருந்து நாலுவேதபதிக்கு தனியார் மினிபஸ் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இரவு வேதாரண்யத்திலிருந்து புறப்பட்ட மினிபஸ் பெரியகுத்தகை சாலையில் சென்றது. இந்த பஸ்சுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர்பஸ்சுக்கு வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் டிரைவர் புஷ்பவனத்தைச் சேர்ந்தமணிவாசகம் (வயது24) ஹாரன் அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மோ ட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தேத்தாக்குடியை சேர்ந்த ராஜேந்திரன்(36), மினிபஸ் முன்பு மோட்டார்
சைக்கிளை நிறுத்தி விட்டு டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த டிரைவர் மணிவாசகம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story