பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.89 லட்சம் போதைப்பொருள் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.89 லட்சம் போதைப்பொருள் சிக்கியது
x
தினத்தந்தி 2 May 2022 1:12 AM IST (Updated: 2 May 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.89 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள சரக்கு பெட்டகத்திற்கு வந்து இருக்கும் பார்சல்களில், போதைப்பொருட்கள் இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான நிலைய சரக்கு பெட்டகத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு வந்திருந்த பார்சல்களை பிரித்து சோதனையிட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து வந்திருந்த ஒரு பெட்டியில் ஆயத்த ஆடை தொழிற்சாலை பெயர் இருந்தது. அந்த பெட்டியின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதை பிரித்து பார்த்த போது பெட்டிக்குள் போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பெட்டிக்குள் இருந்த 4 கிலோ போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்மதிப்பு ரூ.89 லட்சம் ஆகும். மேலும் போதைப்பொருட்களை பெங்களூருவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானத்தில் கடத்த முயன்றதும் தெரிந்தது. இதுதொடர்பாக விஜயவாடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பின்னர் சிறையில் அடைத்தனர்.

Next Story