நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 32 லட்சத்துக்கு மது விற்பனை
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 32 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 32 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
மே தின விடுமுறை
நாகை மாவட்டத்தில் 56 டாஸ்மாக் கடைகளிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 44 டாஸ்மாக் கடைகளிலும் என மொத்தம் 100 கடைகள் உள்ளன.
தமிழகத்தில் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் மதுப்பிரியர்கள் முன்கூட்டிய தங்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி வைத்து கொள்ள நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர்.
ரூ.2 கோடியே 32 லட்சத்துக்கு விற்பனை
இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மது விற்பனையும் ஜோராக நடந்தது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 100 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 32 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story