விபத்தில் கிராம உதவியாளர் பலி
விருதுநகர் அருகே விபத்தில் கிராம உதவியாளர் பலியானார்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை தாலுகா திருவிருந்தாள்புரம் கிராம உதவியாளராக பணியாற்றியவர் மோகன்ராஜ் (வயது 35). இவர் சம்பவத்தன்று கோட்டூர் பாலவனத்தம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே ராமராஜ் என்பவர் வந்த இருசக்கர வாகனம் மோகன்ராஜ் வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் கிராம உதவியாளர் மோகன்ராஜ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மோகன்ராஜின் மனைவி மஞ்சம்மாள் (24) கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார், ராமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story