வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்


வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
x
தினத்தந்தி 2 May 2022 1:23 AM IST (Updated: 2 May 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

வேன் கவிழ்ந்து 6 பேர் காயம் அடைந்தனர்.

கந்தர்வகோட்டை,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து காரைக்குடியில் நடைபெறுகின்ற ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு செல்வதற்காக அப்பகுதியை சேர்ந்த 35 பேர் 2 வேன்களில் சென்றனர். கந்தர்வகோட்டையில் உள்ள தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சோலகம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது வேனின் டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சென்று சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த 6 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Next Story