மே தின விழா


மே தின விழா
x
தினத்தந்தி 2 May 2022 1:24 AM IST (Updated: 2 May 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம்:
நாகை மீன்பிடி துறைமுகத்தில் தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுத்து, தமிழகத்தில் மே தினத்தை கொண்டு வந்த சிந்தனை சிற்பி சிங்காரவேலரை சிறப்பிக்கும் விதமாக  மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மேதின விழா நடந்தது. விழாவிற்கு தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேலு தலைமை தாங்கினார். இலங்கை தமிழக மீனவ பேச்சுவார்த்தை குழு தலைவர் வீரமுத்து மே தின மீன் கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் மே தின விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது. நாகை நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக தம்பிதுரை பூங்காவை சென்றடைந்தது. ஊர்வலத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சம்பந்தம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். செல்வராசு எம்.பி. முடித்து வைத்து பேசினார்.

Next Story