சமத்துவபுரம் வீடுகள் மராமத்து பணிக்கான உத்தரவு


சமத்துவபுரம் வீடுகள் மராமத்து பணிக்கான உத்தரவு
x
தினத்தந்தி 2 May 2022 1:25 AM IST (Updated: 2 May 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

சமத்துவபுரம் வீடுகள் மராமத்து பணிக்கான உத்தரவினை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

காரியாபட்டி, 
 காரியாபட்டி அருகே கல்குறிச்சி சமத்துவபுரத்தில்  100 வீடுகள் உள்ளன. இந்த சமத்துவபுரம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டதால் ஏராளமான வீடுகள் பழுதடைந்துள்ளது. இந்த வீடுகளை மராமத்து பணி செய்ய வேண்டும் என்று சமத்துவபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள்  அமைச்சர் தங்கம் தென்னரசிடம்  கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் சமத்துவபுரத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு உத்தரவுகள் வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை பயனாளிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், சிவகுமார், காரியாபட்டி தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சேகர், இலுப்பைகுளம் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story