ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொதுமக்கள் அவதி


ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 May 2022 1:26 AM IST (Updated: 2 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,006 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 1,046 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு பி.ஓ.எஸ். மிஷினில் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப உறுப்பினர் ஒருவர் கைரேகை வைத்து பின்னரே கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் சர்வர் கோளாறு காரணமாக ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். மிஷின் இயங்காததால் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கால்கடுக்க வரிசையில் நின்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர். இந்த சர்வர் கோளாறு அடிக்கடி ஏற்படுவதால் கார்டுதாரர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல கடைகளில் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பழைய முறைப்படி ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story