பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
ஆவூர்,
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
விராலிமலை ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இச்சிக்காமலைப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் சவரிமுத்து பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு குறித்து விளக்க உரையாற்றினார். தொடர்ந்து மேலாண்மை குழுவிற்கு புதிய நிர்வாகிகளாக தலைவர் செல்வராணி, துணைத்தலைவராக சித்ரா மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் சான்றிதழ்களை வழங்கினார். முடிவில் ஆசிரியை பிரியதர்ஷினி நன்றி கூறினார். இதேபோல் விராலிமலை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவின் மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
காரையூர், மணமேல்குடி
காரையூர் அருகே உள்ள சடையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தவமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவராக மாரியம்மாள், துணைத்தலைவராக உஷாராணி மற்றும் உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மணமேல்குடியை அடுத்த வடக்கு அம்மாபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய தலைவராக கலையரசி மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி, கறம்பக்குடி
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த விழாவில் முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 5 ஸ்மார்ட் டி.வி. வழங்கினர். மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் சார்பில் பள்ளி கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவருக்கு வண்ணமிடப்பட்டது.
கறம்பக்குடி அனுமார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விராலிமலை
விராலிமலை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக புஷ்பவள்ளி மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் 6 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளை அரசு தொடக்க பள்ளியிலேயே சேர்த்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story