கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் மீதான 7,200 ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து


கே.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள் மீதான 7,200 ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து
x
தினத்தந்தி 2 May 2022 1:34 AM IST (Updated: 2 May 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட 7,200 ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

7,200 ஒழுங்கு நடவடிக்கை ரத்து

கா்நாடக அரசு போக்குவரத்து கழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 8414 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அதாவது ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஊழியர்கள் பணி இடைநீக்கம், பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள். இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

அதன்படி, ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டு இருந்த 7,200 ஒழுங்கு நடவடிக்கைகளை கடந்த 3 நாட்களில் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் ரத்து செய்திருக்கிறது. ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஊழியர்களிடம் இருந்து ரூ.100 முதல் ரூ.500 வரை என ஒழுங்கு நடவடிக்கைகளை பொறுத்து, அபராதம் வசூலித்து ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

ஊழியர்களுக்கு பணி ஆணை

இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று தொழிலாளர் தினவிழா நடைபெற்றது. இதில், கர்நாடக அரசு போக்குவரத்து கழக இயக்குனரான அன்புக்குமார் கலந்து கொண்டு, ஒழுங்கு நடவடிக்கையில் இருந்து வெளியே வந்துள்ள ஊழியர்களுக்கு மீண்டும் வேலைக்கு சேருவதற்கான பணி நியமன ஆணை கடிதத்தை வழங்கினார்.

பின்னர் அன்புக்குமார் பேசுகையில், ஆட்சி நிர்வாகம் என்றால், தவறு செய்யும் ஊழியர்களுக்கு தண்டனை வழங்குவது மட்டும் இல்லை. ஊழியர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகும். ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஊழியர்கள் மீண்டும் தவறு செய்யக்கூடாது. போக்குவரத்து கழகத்திற்கு ரூ.10 கோடி வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால் ரூ.8 கோடி தான் கிடைக்கிறது. பெரும்பாலும் டீசலுக்கே செலவு செய்யப்படுகிறது, என்றார்.

Next Story