வேறொரு பெண்ணுடன் தொடர்பு; டிரைவர் கைது


வேறொரு பெண்ணுடன் தொடர்பு; டிரைவர் கைது
x
தினத்தந்தி 2 May 2022 1:39 AM IST (Updated: 2 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்மகோட்டை  கணேஷ் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44), டிரைவர். இவருடைய மனைவி மாரியம்மாள் (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மாரியம்மாள் தனது கணவரை பிரிந்து பொள்ளாச்சியில் உள்ள ஆசிரமத்தில் கூலி வேலை செய்து வந்தார்.  இந்தநிலையில் மாரியம்மாள் தனது சொந்த ஊருக்கு வந்து பார்த்தபோது மணிகண்டன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாரியம்மாள் இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story