சிறப்பு துப்புரவு முகாம்


சிறப்பு துப்புரவு முகாம்
x
தினத்தந்தி 2 May 2022 1:40 AM IST (Updated: 2 May 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே சிறப்பு துப்புரவு முகாம் நடைபெற்றது.

காரியாபட்டி, 
விருதுநகர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் பேரூராட்சியில் துப்புரவு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. காரியாபட்டி பேரூராட்சியில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு முகாம் தொடக்க நிகழ்ச்சி சக்தி மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. பேரூராட்சி சேர்மன் செந்தில் தூய்மை பணி முகாமினை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இது குறித்து பேரூராட்சி சேர்மன் கூறியதாவது:- காரியாபட்டி பேரூராட்சியில் புதிதாக நிர்வாகத்தில் பொறுப்பேற்றவுடன் நகர் பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள் தேங்காமல் இருக்க உடனுக்குடன் தூய்மை பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம். வீடுகளில் குப்பைகள் சேகரிக்க செல்லும் பணியாளர்களுக்கு கால அட்டவணை போடப்பட்டு முறைப்படுத்தி வருகிறோம். தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பாக பணி செய்வதற்கு தேவையான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்த குப்பை அள்ளும் டிராக்டர் வண்டிகள் பராமரிப்பு செய்யப்பட்டது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story