2 வீடுகளில் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு


2 வீடுகளில் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 2 May 2022 1:45 AM IST (Updated: 2 May 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

2 வீடுகளில் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் திருட்டு நடைபெற்றது.

குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, அதே கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்களது வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார். அந்த நேரத்தில் 2 வீடுகளின் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து ராஜா வீட்டில் 14 பவுன் நகைகள் ரூ.48 ஆயிரமும், செல்வராஜ் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.58 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதிகாலையில் வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இருவரும் தனித்தனியே குன்னம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Next Story