சாலை தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 15 பேர் படுகாயம்


சாலை தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 May 2022 1:45 AM IST (Updated: 2 May 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் சாலை தடுப்புச்சுவரில் பஸ் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

விருத்தாசலம்

கடலூரில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்கு சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில் 15 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்களை விருத்தாசலம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story