தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 May 2022 1:50 AM IST (Updated: 2 May 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

புதிய மின்கம்பம் வேண்டும்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் காசாங்குளம் முதல் சந்தில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுகா கடம்பங்குடி கிராமம் இந்திரா நகர் தெருவில் மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் மின்கம்பத்தின் அருகில் உள்ள மரக்கிளைகளில் மின்கம்பிகள் அடிக்கடி சிக்கிக்கொள்கிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும், மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பூதலூர்.
ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மூத்தாக்குறிச்சி கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த தொட்டி பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

Next Story