வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவனை மீட்ட பெண் போலீஸ்
வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவனை பெண் போலீஸ் மீட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரியும் பூங்கொடி நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அரியலூர்-பெரம்பலூர் சாலையில் கவுல்பாளைம் அருகே 14 வயதுடைய சிறுவன் லிப்டு கேட்டு பெண் போலீசின் ஸ்கூட்டரில் ஏறினான். சிறுவனிடம் நைசாக பெண் போலீஸ் பேச்சு கொடுத்து, அவனை பற்றி விசாரித்தார். விசாரணையில், அவன் வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் என்பதும், அவன் வீட்டை விட்டு ஓடிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெண் போலீஸ் பூங்கொடி சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, சிறுவனை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து சிறுவனை பெற்றோர் வந்து அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story