‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 2 May 2022 2:11 AM IST (Updated: 2 May 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நாய்கள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவின் முக்கிய வீதிகளில் வெறி நாய்கள் அதிகமாக சுற்றி திரிகிறது. இந்த நாய்கள் ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்திச் சென்று கடித்து வருகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வபர்களை  துரத்தி செல்வதால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.     பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம். 

எரியாத தெருவிளக்கு

 மதுரை மாவட்டம் திருநகர் 94-வது வார்டு இந்திராகாந்தி தெருவில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் தெருவிளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆத்மராவ், மதுரை.

கூடுதல் பஸ்வசதி 

 மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கு ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இது தவிர அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பயணம் செய்யும் இப்பகுதியில் போதிய அளவு பஸ்வசதி இல்லை. இதனால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். மாணவர்களின் நலன்கருதி இந்த பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி, மானாமதுரை.

குண்டும், குழியுமான சாலை

 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி 8-வது வார்டில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையில் பயணிப்பதால் வாகனங்கள் அவ்வப்போது பழுதாகின்றது. மேலும் நகரில் தண்ணீர் குழாய் பழுதாகி இருகின்றது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சாலைைய சீரமைப்பதுடன், குடிநீர் குழியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 சினிவாசன், திருத்தங்கல்.

ஆபத்தான பள்ளம்

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பாலத்தில் பல இடங்களில் பள்ளம் விழுந்து ஆபத்தான நிலையில் காட்சி அளித்து வருகின்றது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் உள்ள பள்ளத்தை  சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
விக்கி, ராமநாதபுரம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர் 

 மதுரை மாவட்டம் செல்லூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி ெதாற்றுநோய் பரவும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் கால்வாயை  சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?.
விக்டர், செல்லூர்.

Next Story